Message from DGP Desk

 

"PROSPEROUS PUDUCHERRY"

(Safety / Security / Sanitation) "Serving with Smile"

Smt.S. Sundari Nanda, IPS - dgp.pon@nic.in

Message from DGP Desk

Tamil English French

Malayalam

Telugu

          Tamil

புதுவைக் காவல்துறையின் இலக்கென்பது சட்டத்திற்குட்பட்டு அச்சமின்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும், வேண்டியவர் வேண்டாதவர் என்பதைக் கடந்து அனைத்து பொதுமக்களின் மனித உரிமை  பாதுகாப்பேயாகும். காவல்துறையென்பது கட்சி வேறுபாடுகளை கடந்து, விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும், நிலைநாட்டுவதற்காகவும் கடுமையாக உழைத்தலும், சமூகத்தில்  ஒற்றுமையை ஏற்படுத்துவதேயாகும். காவல்துறையின் முக்கிய நோக்கமென்பது குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல் மற்றும் கண்டுபிடித்தலே ஆகும்.

 

              எனினும், பொதுமக்களின் ஒத்துழைப்போ பங்களிப்போயின்றி இவையெல்லாம் சாத்தியமாகாது. தற்போது புதுவை காவல்துறையானது நாட்டின் வளர்ச்சிக்குத்  தடையாக உள்ள மிகப் பெரும் தீயச் சக்திகளான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துதல், சூதாட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் களைவதேயாகும். புதுவை அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலங்களில் காவல் துறை உதவியைப் பெறுவதற்கான 1031 என்ற இலவச தாெலைபேசி எண்ணை தொடர்புகொண்டு குற்றம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும். இதன் மூலமாக குற்றமில்லா நகரமாக புதுவையை உருவாக்க முடியும்

 

             புதுவைக் காவல்துறையானது பெருகி வரும் வாகன விபத்துக்களையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான விபத்துக்களில் சிக்குபவர்கள் தலையில் ஏற்படும் காயங்களால் மட்டுமே உயிரிழக்கிறார்கள். இதுபோன்ற விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நம்மால் நிச்சயம் கட்டுப்பாட்டிற்குள் உடனே கொண்டு வரமுடியும். இதற்கான ஒரே தீர்வு இரு சக்கர வாகன பயணத்தின்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பயணிப்பது மட்டுமே. தலைக்கவசத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசத்தைப் பயன்படுத்த தாங்களாகவே முன் வரவேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டவோ, மறுக்கவோ கூடாது. 500 ருபாய் மதிப்புள்ள தலைக்கவசத்தைப் பயன்படுத்துவதால் விலைமதிப்பற்ற மனித உயர் பாதுகாக்கப்படுகிறது. புதுவை வாழ் அனைத்து மக்களுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

 

TOP

  English

        The mission of the Puducherry police is to uphold the rule of law without fear or favour and to provide safety and security to the people and preserving their Human Rights. The Police shall strive to maintain law and order and harmony in the society by performing duties in a non-partisan and unbiased manner. Our main aim is to control crime through prevention and detection.

 

             However, all this is not possible without active public cooperation. Presently, we are concentrating to eliminate evils like drug addiction, gambling and sex abuse etc. Provide us information regarding illegal activities on our toll free number 1031 and make Puducherry crime free. Your identity will be kept secret.

 

             We also want to reduce road accident cases in Puducherry. Many deaths occur because of head injuries. Such cases can be controlled immediately, if we start wearing helmets while on two wheelers. There should be no hesitation in using helmet. A 500 rupees helmet can save your priceless life.

                My best wishes to every citizen of Puducherry. Jai Hind.

 

TOP

French

             La mission de la police de Pondichéry est de faire respecter la primauté du droit, sans crainte ni faveur et pour assurer la sécurité du peuple et de préserver leurs droits de l'homme. La police doit s'efforcer de maintenir la loi et l'ordre et l'harmonie dans la société en effectuant des tâches d'une manière non partisane et impartiale. Notre objectif principal est de contrôler la criminalité par la prévention et la détection.

 

              Cependant, tout cela est impossible sans la coopération active du public. À l'heure actuelle, nous nous concentrons pour éliminer les maux tels que la toxicomanie, le jeu et les abus sexuels, etc. Fournissez-nous des informations concernant des activités illégales sur notre numéro gratuit 1031 et rendre le Pondichéry sans criminalité. Votre identité sera gardée secrète.

 

             Nous voulons aussi réduire les cas d'accidents de la route à Pondichéry. De nombreux décès se produisent en raison de blessures à la tête. De tels cas peuvent être commandés immédiatement, si nous commençons à porter un casque pendant sur la moto. Il ne faut pas hésiter à utiliser le casque. Un casque de 500 roupies peut sauver votre vie inestimable.

 

             Mes meilleurs vœux à tous les citoyens de Pondichéry.  Jai Hind.

 

TOP

Malayalam

TOP

Telugu

 

             చట్టాన్ని  అమలు పరచుట, ప్రజలకుగల మానవ హక్కులను పరిరక్షిస్తూ ప్రజలకు రక్షణ, భద్రత కల్పించుట పుదుచ్చేరి పోలీసుల ప్రధానలక్ష్యం. శాంతి భద్రతలను నిర్వహిస్తూ సమాజంలో సామరస్య వాతావరణాన్ని కల్పించటానికి పోలీసులు నిత్యం శ్రమిస్తూ తమ భాద్యతలను నిష్పక్షపాతంగా నెరవేరుస్తారు. నేర నివారణ, నేరస్తుల గుర్తింపుద్వారా నేరాలను నియంత్రించుట పోలీసుల ముఖ్య ఉద్దేశం.

 

                 ప్రజల యొక్క సంపూర్ణ సహకారంతోనే ఇవన్నీ సాద్యమవుతాయి. మాదక ద్రవ్యాలకుఅలవాటు పడుట, జూదం మరియు  లైంగిక వేధింపులు మొదలైన దుశ్చర్యల నిర్మూలనకై ప్రస్తుతం మేము మా దృష్టిని కేంద్రీకరిస్తున్నాము. పుదుచ్చేరిని నేరరహితంగా తీర్చిదిద్దుటకు చట్టవ్యతిరేక చర్యలను గూర్చిన సమాచారం ప్రజలు 1031 అను మా టోల్ ఫ్రీ నెంబర్ ద్వారా తెలియచేయవచ్చును. మీ గుర్తింపు వివరాలు రహస్యంగా వుంచబడతాయి.

 

              పుదుచ్చేరిలో రహదారి ప్రమాదాలను కూడా నివారించదలచాము. తలకు గాయాల వల్ల  అధిక సంఖ్యలో మరణాలు సంభవిస్తున్నాయి. ద్విచక్ర వాహనాలపై వెళ్ళేవారు తలకు హెల్మెట్ ధరించడం ద్వారా అట్టి ప్రమాదాలను వెంటనే నివారించవచ్చు. హెల్మెట్ ధరించడానికి సంకోచించవలసిన అవసరం లేదు. మీ అమూల్యమైన జీవితాన్ని ఒక 500 రూపాయల హెల్మెట్ కాపాడగలదు.

 

“పుదుచ్చేరి పౌరులందరికీ నా శుభాకాంక్షలు.” - జైహింద్

      

       

                               TOP